திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் பிரதி தவிசாளராக நவ்பர் பதவியேற்றார்

Rihmy Hakeem
By -
0

 


ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் பிரதி தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் முஹமட் நவ்பர் தமது  கடமைகளை  தவிசாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஈ.ஜீ.  ஞானகுணாளன் முன்னிலையில் நேற்று (16) பொறுப்பேற்றார்.

இந்த நிகழ்வில்நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், கிண்ணியா நகர சபை நகர பிதா எஸ்.எச்.எம். நளீம், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.அஜீத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தவிசாளர், உதவித் தவிசாளர் பதவிகளை ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் பெற்றுக் கொண்டது.

இதன்போது இரண்டு வருடங்களுக்கு பின்பு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவருக்கு உதவித் தவிசாளர் பதவியை வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரான முஹமட் நவ்பருக்கு உதவித் தவிசாளர் பதவி தற்போது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)