கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை வைப்பதற்கான பிரதேப் பெட்டிகளுக்கான பணத்தை அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களிடமிருந்து அறவிடுகின்றனர் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் பிரதேப் பெட்டிக்கான செலவை கூட செலுத்த முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 சுகாதார நல சமூக பாதுகாப்பு நிதியத்தை உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளிற்காக பயன்படுத்துமாறு அரசாங்கத்தை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

உயிரிழந்தவர்களில் அனேகமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள் கொரோனா வைரசினால் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.