நேற்று முன்தின் மரணமடைந்த கொழும்பு - 13 ஜம்பெட்டா வீதியை சேர்ந்த 68 வயதான பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த பெண்ணின் மரணத்திற்கு கொவிட் நியுமோனியாவே காரணம் என்று அறிக்கை வெளியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு இதற்கு முன்னர் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

இலங்கையில் கொவிட் 19 காரணமாக 22வது மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.