இன்றைய 20 வது COVID மரணமும் இதற்கு முந்திய இரு கோவிட் மரணங்களும் முஸ்லிம்களாக இருக்கத்தக்க அவர்களுடைய உடல் தகனம் செய்யப்பட்டன என்பது உண்மையிலேயே எம்மனதுகளை உறுத்துவதுடன் மிகவும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. 

எல்லா வகையிலும், இந்த தொற்றுநோயை அதீத கவனம் செலுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற மனப்பக்குவத்துடன் எமது மக்கள் குறிப்பாக முஸ்லிம் சமூகம் மிகுந்த ஒத்துழைப்பை வழங்கிவருகிறோம் 

உலகெங்கிலும் நடைமுறையில் உள்ள சர்வதேச சுகாதார அமைப்பின் விதிமுறைகள், வழிகாட்டல்கள்  மற்றும் விதிமுறைகளுக்கு அமைவாக கோவிடினால் இறப்பவர்கள் இவ் உலகவாழ்வின் இறுதிப்பயனத்தை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்யப்பட வேண்டிய நடைமுறையை ஏனைய நாடுகளில் அமுல்படுத்துவது போன்று எமது நாட்டிலும் அமுல்படுத்தப்படவேண்டுமென்பதை  நாங்கள் கேட்டுள்ளோம்.  இலங்கை சுகாதார விதிமுறைகள் மாத்திரம் இதற்கு ஒரு விதிவிலக்கை ஏற்ப்படுத்தி மரணிக்கின்ற முஸ்லிம் மையத்துக்களையும் எரியூட்டுகின்ற நடவடிக்கையைத்தான் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

 இந்த விவகாரத்தில் சுகாதார அதிகாரிகள் ஒருவித காழ்ப்புணர்ச்சியுடன் செயற்படுகின்றார்கள் சர்வதேச விதிமுறைகளைப்பேணி நல்லடக்கம் செய்யலாம் என்ற நடைமுறையை கொண்டுவருவதற்க்கான ஒத்துழைப்பை வழங்காது செயற்ப்படுகின்றார்கள் என்ற செயற்ப்பாட்டை நானும் இன்னும் இந்த விசயத்தில் ஆர்வமும் அக்கறையும் கொண்ட பலரும் கடந்த மே மாதம் உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுக்களை சுகாதார அமைச்சர், சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் (DGHS) அரச சட்டமா அதிபர் (அட்டர்னி ஜெனரல் ) மற்றும் இது தொடர்பான பொறுப்பாளர்களை  பெயரிட்டு வழக்குத்தொடர்ந்துள்ளோம். அடுத்த நீதிமன்ற விசாரணைகள் நவம்பர் 26 ஆம் திகதி நாள்தரப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், கோவிட் இறப்புக்களின் எண்ணிக்கைகள் அதிகரித்துக் கொண்டிருப்பதால் இந்த தருணத்திலே மனிதாபிமான அடிப்படையில் இந்த அத்தியவசியமான அவசர பொது வேண்டுகோளை எமது நாட்டின் நிறைவேற்று அதிகாரத்தை தன்னகத்தே கையிலெடுத்துள்ள ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ அவர்களிடமும், கெளரவ  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர் களிடமும், கெளரவ   எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கெளரவ சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மற்றும் கெளரவ .  நீதி அமைச்சர் அலி சப்ரி போன்றோர்களிடம் எங்கள் அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள படி எங்களது மார்க்க சுதந்திரங்களை மதித்து தகனம் செய்கின்ற செயற்பாட்டை மாற்றியமைத்து குறிப்பாக கோவிடினால் இறக்கின்றவர்களை நல் அடக்கம் செய்வதும் உலகளவில் நிறுவப்பட்ட நடைமுறையாக இருக்கிறது. அவ்வாறே இந்த நடைமுறையை உணர்ந்து நமது நாட்டிலும் அமுல்படுத்துங்கள் என்பதை முன்வைப்பதுடன் அனைத்து அரசியல் தலைவர்களும் இன, மத, அரசியல் பேதங்களை களைந்து உணர்வு பூர்வமாக உணர்ந்து செயற்ப்படுமாறு வினயமாகக் கேட்டுக்கொள்கிறேன்.

 மேலும், 20 வது திருத்தத்திற்கு ஆதரவளித்துள்ள முஸ்லீம் எம்.பி.க்கள் , முஸ்லிம் மக்களது வெறுப்புக்கும் இறைவனது சாபத்துக்கும் உள்ளாக்கப்பட்டுள்ள எமது மையத்துக்கள் எரியூட்டப்படுகின்ற நிலையை உருவாக்கியுள்ள இந்த அரசாங்கத்தின் இந்த இழி செயலை கிஞ்சிதமும் கண்டு கொள்ளாது ஆதரவு கொடுத்திருப்பது எமது சமூகத்துக்கு இழைத்துள்ள வரலாற்று துரோகம் என்பதே தவிர உண்மையிலேயே நீங்கள் முஸ்லிம் சமூகத்தின் நண்மைகள் கருதியே பாராளுமன்றத்தில் ஆதரவளித்தீர்கள் என்று மார்தட்டியது , உங்களது சுயநலங்களை மையமாக வைத்து பேரம்பேசிய போலி நாடகங்களே என்பதை இன்று இறைவன் எங்களுக்கு வெளிப்படையாக காட்டியுள்ளான் என்பதுதான் இன்றைய நிதர்சனம் .

 ஆயினும்கூட, இந்த 6 எம்.பி.க்களிடம் வினயமாக 

கேட்டுக்கொள்கிறேன், தயவுசெய்து உங்களது தனிப்பட்ட அபிலாஷைகளை ஒரு புறம் ஒதுக்கி வையுங்கள்.

நீங்கள் பெற்றுள்ள இந்த பிரதிநிதித்துவத்துக்காக எனது பங்களிப்பையும், பிரச்சாரத்தையும் வழங்கியவன் . நீங்கள் அளித்த வாக்குறுதிகள் இந்த சிக்கலைத் தீர்ப்பதை உள்ளடக்கியது என்பதை மறந்துவிட்டீர்கள்.

எனவே இந்த வாக்குரிதிகளுக்கு முன்னுரிமையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .

கொள்கைகளை கைவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.

செய்யித் அலி ஸாஹிர் மௌலானா,

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் இராஜாங்க அமைச்சர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.