நேற்றைய தினம் (20) ஐ.டி.எச். வைத்தியசாலையிலிருந்து தனது இரண்டு வயது குழந்தையுடன் தப்பியோடிய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 25 வயதுடைய தாயொருவரை பொலிஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். 

குழந்தை உறவினர் ஒருவரது வீட்டில் இருந்து நேற்று மீட்கப்பட்டது.

இந்நிலையில் எஹலியாகொட, கிரயெல்ல ஆகியப் பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்தப் பொலிஸார் நேற்று இவரைத் தேடும் பணிகளில் ஈடுபட்டிருந்ததாகவும், ஆனால் அவரைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.