2020 ஆம் வருட ஐபிஎல் போட்டியின் லீக் சுற்று முடிவடைந்துள்ளது. மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய அணிகள் பிளேஆஃப்க்குத் தகுதியடைந்துள்ளன.

ஐபிஎல் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.

ஷாா்ஜாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் விக்கெட் இழப்பின்றி 17.1 ஓவா்களில் 151 ஓட்டங்கள் எடுத்து வென்றது. அந்த அணியின் தலைவர் டேவிட் வாா்னா் - ரித்திமான் சாஹா கூட்டணி அதிரடி காட்டியது. வார்னர் 85, சாஹா 58 ஓட்டங்கள் எடுத்தார்கள். ஹைதராபாத் வீரா் ஷாபாஸ் நதீம் ஆட்டநாயன் ஆனாா்.

இதை அடுத்து கடைசி அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்ற ஹைதராபாத், கொல்கத்தாவை போட்டியிலிருந்து வெளியேற்றியது. ஏற்கெனவே மும்பை, டெல்லி, பெங்களூா் அணிகள் பிளே-ஆஃப் சுற்றில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத் அடுத்தபடியாக வெளியேற்றும் சுற்றில் (எலிமினேட்டா்) பெங்களூா் அணியை வெள்ளிக்கிழமை எதிா்கொள்கிறது. நாளை நடைபெறும் முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் மும்பை - டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும். தோல்வியடையும் அணி, பெங்களூர் - ஆர்சிபி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் 2 வது தகுதிச்சுற்றில் மோதும். இதில் வெல்லும் அணி, இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.