-பிரதீபன்-

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை ஆதிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் வீசிய மினி சூறாவளியால் 40 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சற்று முன்னர் இடம்பெயர்ந்துள்ளன.

திடீரென வீசிய கடும் காற்றினால் வீடுகள் பல சேதமடைந்ததுடன், மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன.

திடீர் அனர்த்தம் காரணமாக வீடு ஒன்றின் இருந்தபோது கூரை வீழ்ந்து ஏற்பட்ட பாதிப்பில் அதே பகுதியைச் சேர்ந்த பீற்றர் மஹிந்தன் (வயது 35) என்பவர் தலையில் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை வீடுகளில் பாதிப்பு ஏற்பட்டதால் இடம்பெயர்ந்த மக்கள் அந்தப் பகுதிகளில் உள்ள தனியார் மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.