பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி எமானுவேல் மக்ரோனுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

42 வயதான மக்ரோன் கொவிட் அறிகுறிகள் தோன்றியதனையடுத்து மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று உறுதியாகியிருப்பதுடன், அவரை ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்ரோன் தற்போதும் நாட்டினை நிர்வகித்துக் கொண்டிருப்பதாகவும் தொடர்ந்தும் நிர்வாகம் செய்யவிருப்பதாகவும் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸில் இதுவரை 2 மில்லியன் அளவிலான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் 59,400 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.