லங்கா பிரிமியர் லீக் இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் இறுதிப் போட்டி நேற்று ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் கோல் கிளடியேடர்ஸ் அணிகளுக்கிடையிலான இறுதி போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆபார வெற்றி பெற்றுள்ளது. வெற்றிக்கிண்ணத்தை இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அணித் தலைவர் திஸர பெரேராவிடம் வழங்கினார்.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி சார்ப்பில் அதிக பட்சமாக சுஹைப் மலிக் 46 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் கிளடியேடர்ஸ் அணி தற்போது 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.


1608139757 jaffnaboys 2

CHA 2

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.