மரக்கறி விலையைக் கட்டுப்படுத்த விவசாய அமைச்சின் நேரடி தலையீட்டுன் அடுத்த வாரம் முதல் விசேட வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை கொள்வனவு செய்து அவற்றை பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கொண்டு வருவதில் விவசாய அமைச்சு தலையிட்டுள்ளதாக, நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

பொருளாதார மத்திய நிலையங்களில் ஒதுக்கப்பட்டுள்ள வியாபார நிலையங்களை வேறு வியாபாரங்களுக்காக குத்தகைக்கு விடுவதை தடுக்கும் விசேட சுற்றறிக்கை ஒன்று எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.