கொவிட் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம் நபர்களின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் இறுதி தீர்மானம் எதிர்வரம் தினத்தில் வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் வைத்தியர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ள முஸ்லிம் நபர்களின் சடலங்களை அடக்கம செய்வது தொடர்பிலான இறுதி தீர்மானம் பெற்றுக் கொடுக்கப்படும் வரை குறித்த சடலங்களை குளிரூட்டப்பட்ட கொள்கலன்களின் வைக்க நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கு தேவையான குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை கோரி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கொழும்பு பிரான சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு குறித்த கொள்கலன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அரசாங்கம் இது தொடர்பில் உரிய தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.