வரலாற்று சிறப்புமிக்க தெவனகல தொல்பொருள் தளத்தை அண்மித்த தேவையற்ற கட்டுமானங்கள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் மல்வத்து பீடத்தின் அநுநாயக்க தேரர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.

தெவனகல தொல்பொருள் தளத்தை அண்மித்த இடங்களை எவ்வித தரப்பினர்களுக்கும் சட்டவிரோதமாக உரிமையாக்க அனுமதிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.

தெவனகல தொல்பொருள் தளம் மல்வத்து மகா விகாரைக்கு சொந்தமான விகாரையாகும். அதனை பாதுகாக்கும் பொறுப்பை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஏற்கவேண்டும். குறித்த இடத்தை பாதுகாத்து தர வேண்டியது அவர்களின் கடமையாகும். வரலாற்று சிறப்புமிக்க தெவனகல தொல்பொருள் தளத்திற்கு சொந்தமான நிலங்களை பாதுகாக்க அரசு தலையிட வேண்டும் என மல்வத்து பீடத்தின் அநுநாயக்க தேரர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார். (AD)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.