கொரோனாவினால் பொருளாதார ரீதியாக பாதிக்கபட்ட வறிய குடும்பங்களுக்கு இலங்கை நெய்னார் சமூகநல காப்பகம் சார்பில்  அனுசரணையாளர்கள் உதவியுடன் இம்மாதமும்  25 குடும்பங்களுக்கு ரூபாய் 3500 பெறுமதியான உலர் உணவு பொதிகளும் மேலும் 25 குடும்பங்களுக்கு ரூபாய் 2500 பொறுமதியான வவுச்சர்களும் அதன் தலைவர் இம்ரான் நெய்னார் அவர்களினால்  வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு நீண்ட கால நோயாளர்கள் சிலருக்கு மருந்து செலவும் வழங்கிவைத்ததோடு இரண்டு சிறுவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சைக்காக பண உதவியும் வழங்கிவைக்கபட்டது. 

(சிகிச்சை முடிந்து நலத்துடன் வீடு திரும்பிய குழந்தை தன் பிஞ்சு குரலால் நன்றி சொல்லி அனுப்பிய ஆடியோ என்னை அழவைத்துவிட்டது) 

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே

அத்தோடு இலங்கை நெய்னார் கலைஞர் நிதியத்தின் ஊடாக சுமார் 10 வறிய கலைஞர்களுக்கு ரூபாய்  2000 பெறுமதியான வவுச்சர்களும் திரு Pat Metha  Oviyan Oviyanarts  அவர்களிடம்  வழங்கி வைக்கப்பட்டது.

தகவல் : 

ஹஸ்னி அஹமட்,

பொருளாளர்

இலங்கை நெய்னார் சமூக நல காப்பகம்கருத்துரையிடுக

Blogger இயக்குவது.