கொரோனா பாதிப்புடன் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரியூட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல்​வேறு வழிகளிலும் எதிர்ப்புக் குரல்கள் கொடுக்கப்படுகின்றன.

கபனின் ஒரு பகுதியான வெள்ளைத் துணியூடாக மண்ணறையை மறுப்பவர்களுக்கு அறிவூட்டும் அமைதியான அடையாள எதிர்ப்புப் போராட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

20 நாட்களேயான சிசுவும் பலவந்தமாக எரியூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிசுவின் புகைப்படத்துடன் மன்னித்துவிடு மகனே! என எழுதப்பட்டு பதைகையின் அருகில் நின்று, எதிர்ப்புத் தெரிவிக்கும் புகைப்படம் (அக்கரைப்பற்று) சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பலவந்த ஜனாஸா எரிப்புக்கு எதிரான அமைதி போராட்டங்கள் தற்போது நாடளாவிய ரீதியில் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் பல்வேறு தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.