க.பொ.த. சாதாரண தர பரீட்சை ஏற்கனவே குறிப்பிடப்பட்ட தினங்களில் இடம்​பெறுமா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் இன்று (01) அல்லது நாளை (02) அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவர்களில் 50 சதவீதமான மாணவர்களுக்கு கல்வி கற்க முடியாத நிலை காரணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

க.பொ.த. சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையில் நடாத்த இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

குறித்த தினங்களில் பரீட்சை இடம்பெறுமா? இல்லையா? என்பது தொடர்பில் விரைவில் அறிவிப்பு ஒன்றை மேற்கொள்வதாக அமைச்சர் ஜி.எல் பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.