சமூக வலைத்தளங்களை அணுகுவதற்கும் அவற்றில் கணக்கொன்றை திறந்து பராமரிப்பதற்கும் பயனர்கள் அரசாங்கத்தில் பதிவு செய்யத்தேவையில்லை என்று இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் (ITSSL) தெரிவித்துள்ளது.

ITSSL தலைவர் ராஜிவ் யசிரு குருவிட்டகே இது தொடர்பில் தெரிவிக்கையில், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பதிவு செய்வதற்கு அரசாங்கத்தில் பதிவு செய்வது அவசியம் என்று வெளியான ஊடகங்களில் வெளியான தகவல் எமது நிறுவனத்தின் கவனத்தை ஈர்த்தது.

சமூக வலைத்தள பயனர்கள் அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் எனின் அது பேச்சு சுதந்திரத்திற்கு விழுந்த பாரிய அடியாகவே நாங்கள் பார்க்கிறோம்.

அரசாங்கத்திலுள்ள அமைச்சர் இது போன்ற ஊடக அறிக்கைகளை வெளியிடும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஏற்கனவே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் , சமுக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தனது கருத்துக்களை தெளிவுபடுத்தி இன்று (திங்கட்கிழமை) ஒரு அறிக்கையை வெளியிட்ட அமைச்சர், சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வது அரசாங்கத்தின் நோக்கம் இல்லை எனவும், வெளிநாட்டு டிஜிட்டல் செயற்பாட்டாளர்களை பதிவுசெய்வதையே அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்றும்  குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.