சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துதல் தொடர்பில் தான் தெரிவித்த கருத்துக்கள் சில தரப்பினரால் திரிபுபடுத்தப்பட்டு பிரசாரப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், சமூக ஊடக பயனர்களை பதிவு செய்வது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல என்று கூறியுள்ளார்.

வெளிநாட்டு டிஜிட்டல் செயற்பாட்டாளர்களை பதிவுசெய்வதையே அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த டிஜிட்டல் பன்னாட்டு கூட்டு நிறுவனங்கள் உள்ளூர் வணிகங்களை பெரிதும் பதிப்பதாகவும் இது நடுத்தர நிறுவனங்களை நேரடியாக பாதிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த வெளிநாட்டு டிஜிட்டல் தளங்கள் மூலம் நாட்டை விட்டு பெரும் தொகை வெளியேறுவதற்கு வழிவகுக்கிறது என்றும் அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் "முகநூல் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து சமூக ஊடக பயனர்களையும் பதிவு செய்யும் திட்டத்தை தனது அமைச்சு வகுத்துள்ளது" என்று அவர் தெரிவித்திருந்தனை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.