நாளை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ள மற்றும் விடுவிக்கப்படவுள்ள பிரதேசங்கள் குறித்து கொவிட் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் தலைவர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தகவல் வெளியிட்டுள்ளார்.

விபரம் :

கொழும்பு மாவட்டம்

நாளை (21) அதிகாலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ள பிரதேசங்கள்:

  • வெல்லம்பிடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாலமுல்ல கிராம சேவகர் பிரிவு
  • வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோகிலா வீதி

(ஏனைய பிரதேசங்களில் லொக்டவுன் தொடர்ந்து அமுலில் இருக்கும்)

கம்பஹா மாவட்டம்

நாளை அதிகாலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ள பிரதேசங்கள்:

  • வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெரவலபிடிய கிராம சேவகர் பிரிவில் நயிதூவ பிரதேசம்
  • பேலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கங்கபட கிராம சேவகர் பிரிவு
  • கிரிபத்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விலேகொட கிராம சேவகர் பிரிவு

(ஏனைய பிரதேசங்களில் லொக்டவுன் தொடர்ந்து அமுலில் இருக்கும்)

நாளை அதிகாலை 5.00 மணி முதல் புதிதாக தனிமைப்படுத்தப்படவுள்ள பிரதேசங்கள்:

  • பேலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கங்கபட கிராம சேவகர் பிரிவிலுள்ள நெல்லிகஹவத்த மற்றும் பூரணகொடுவத்த
  • கிரிபத்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விலேகொட கிராம சேவகர் பிரிவிலுள்ள ஶ்ரீ ஜயந்தி மாவத்தை

நாட்டிலுள்ள ஏனைய மாவட்டங்களில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுப்பட்டுள்ளதாகவும் அவர் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.