பேருவளை, மக்கொன பிரதேசத்தின் மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு பயணத் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் குறித்த பிரதேசத்தில் 50க்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் வருண செனவிரத்ன தெரிவித்தார்.

அதன்படி, கிழக்கு மக்கொன, மேற்கு மக்கொன மற்றும் அக்கரமலை ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினுள் 361 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மக்கொன பிரதேசத்தில் 107 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.