மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த நான்கு பேரின் சடலத்தை தகனம் செய்ய வத்தளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்போது உயிரிழந்த 11 பேரின் பிரேத பரிசோதனைக்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை இன்று (16) வத்தளை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதில் நான்கு பேரின் பூதவுடல்களை அடக்கம் செய்ய இடமளிப்பதா என்பது தொடர்பான தீர்ப்பு இன்று மதியம் வழங்கப்படவிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மோதல் காரணமாக 11 கைதிகள் உயிரிழந்த நிலையில் அவர்களில் 8 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த கைதிகளுள் நால்வர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனரென, நிபுணர்கள் குழு நடத்திய பிரேத பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தால் வத்தளை நீதவான் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.