மீரிகம, கீனதெனிய பிரதேசத்தில் தனது தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த நிலையில் நபர்களுடன் இணைந்து மதுபானம் அருந்திய இரண்டு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.

பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் பெற்றுக் கொடுத்த (சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட) ´ஸ்பிரிட்´ வகை மதுபானத்தை அருந்திய பின்னர் இவர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மதுபானத்தை அருந்திய மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இரவு இவர்கள் இவ்வாறு மதுபானம் அருந்தியுள்ள நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 54 மற்றும் 47 வயதுடைய சகோதரர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

AD

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.