மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறுவோருக்கு இன்று முதல் எழுமாறான அடிப்படையில்  துரித அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளனது.

இன்று(18) காலை 8 மணி முதல் இந்த நடைமுறை அமுல் படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஸ்கள் உட்பட வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு  எழுமாறான அடிப்படையில் இந்த பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மேலும் பின்வரும் மூன்று வெளியேறும் பகுதிகளில் துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   1. கண்டி - கொழும்பு வீதி : நிட்டம்புவ
  2. அவிசாவளை - கொழும்பு வீதி : சாலாவ, கொஸ்கம
  3. கொழும்பு - சிலாபம் வீதி : கட்டுநாயக்க

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.