-குகதர்ஷன்-

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்று சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்துக்கமைய இன்று இரண்டாவது நாள் ஏழு ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மா நகரில் கொரோனா தொற்று மூலம் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சிபார்சு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு தினங்களில் மாத்திரம் கொரோனாவினால் மரணித்தவர்களின் 16 ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டதாக சுகாதார திணைக்களத்தின் தெரிவித்தனர்.

கொரோனா தொற்று மூலம் மரணித்த ஜனாஸாக்களில் நேற்று கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த ஒன்பது ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், இன்று நிட்டம்புவ பிரதேசத்தினை சேர்ந்த ஐந்து ஜனாசாக்களும், (ஹொரகொல்ல 02, திஹாரி 01, ஓகொடபொல 01, ரன்பொகுணுகம 01), நாரங்கொடயை சேர்ந்த ஒருவர் மற்றும் கொழும்பைச் சேர்ந்த ஒருவருமான ஏழு ஜனாசாக்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று மூலம் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பிரதேசம் தொடர்ந்தும் இராணுவத்தினரில் பாதுகாப்பில் உள்ளதுடன், ஊடகவியலாளர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (RH)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.