பிரதமர் இவ்வருடத்திற்கான தேசிய மீலாத் விழாவினை  நடாத்த வேண்டும் என்று தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இவ்வருடத்திற்கான மீலாத் விழா வைபவம் 2021 ஒக்டோபர் 19 இல் நுவரெலியா மாவட்டத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாத் வைபவத்தினை நடாத்துவது தொடர்பிலான ஏற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல் நேற்றைய தினம் (04) நுவரெலியா மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க, நுவரெலியாவின் பதில் மாவட்ட செயலாளர், முன்னாள் நுவரெலியா மாநகர பிரதி மேயர் மற்றும் அல்ஹாஜ் பழீல், திணைக்களம் சார்பில் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப், முர்ஸி முப்தி, சப்ரி மற்றும் ஸியாத் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். (RH)
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.