பாட விதானங்களைப் புதுப்பிக்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மாத்தறை - ராகுல கல்லூரியிலும், மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியிலும் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டிடங்களை பார்வையிடுவதற்காகச் சென்றிருந்த போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

பாடசாலை பாடவிதானங்களில் சுமார் 20 வருடங்கள் சரியாக கவனம் செலுத்தப்படவில்லை. தற்போதுள்ள பாடவிதானங்களின் உள்ளடக்கம் நாட்டின் பொருளாதார தேவைகள் மற்றும் தொழில் வாய்ப்புக்களுடன் பொருத்தமுடையதாக இல்லையெனவும், புதிய கல்வி சீர்திருத்த நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் பல்கலைக்கழக பாடநெறிகள் நவீன தொழில் சந்தைகளுக்கு ஏற்ற விதத்தில் கட்டமைக்கப்படவில்லை. தகவல் தொழில்நுட்பம், கணனி தொழில்நுட்பம் என்பன பாடவிதானங்களில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். (RH)

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.