ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை தொடர்பிலான நாடாளுமன்ற விவாதம் ஆரம்பமானது (நேரலை)

Rihmy Hakeem
By -
0

 


பாராளுமன்ற அமர்வு இன்று (10) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானது.

உயிர்த்த ஞாயிறு (ஏப்ரல் 21 ) தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மீது பாராளுமன்றத்தில் இன்று (10) ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெற்று வருகின்றது.

இந்த அறிக்கை தொடர்பில் மூன்று நாள் விவாதத்தை முன்னெடுப்பதற்கு கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

இதனடிப்படையில், முதல் நாள் விவாதம் இன்று ஆரம்பமானது.

ஏனைய 2 நாள் விவாதங்களையும் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. (RH)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)