உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி மற்றும் உள் நாட்டிலுள்ள தேசிய ஔடதக் கட்டுப்பாட்டு சபையின் கோவிட் தடுப்பூசி ஆய்வு மற்றும் அனுமதிக்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவின் அனுமதி பெற்ற தரமான கோவிட் தடுப்பூசிகளைத் தான் நாட்டின் ஏனைய மக்களுக்கும் வழங்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

நேற்றைய தினம் (26) எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட எஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகள் அல்லது அதற்கு சமமான அங்கீகாரமுள்ள தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்குங்கள். மக்களுக்கு பக்க விளைவுகளை (Rolling Review) ஏற்படுத்தாத தடுப்பூசிகளை வழங்குங்கள். சீனாவிலிருந்து கிடைக்கவுள்ள தடுப்பூசியை தேசிய ஔதட கட்டுப்பாட்டு சபையின் முன்னர் குறிப்பிட்ட வைத்தியர் ரஜீவ்  டி சில்வா தலைமையிலான குழுவினர் அங்கீகாரம் வழங்க மறுத்துள்ளனர். பல் துறை சார்ந்த நிபுனத்துவமிக்க வைத்தியர்களே இந்த தடையை ஏற்படுத்தியுள்ளனர்.

 அண்மையில் அந்த குழுவிலிருந்து வைத்தியர் ஹசித்த தெசர விலகியுள்ளார்.சீனாவிலிருந்து இலவசமாக கிடைத்தாலும் அனுமதியற்ற தடுப்பூசிகளை எடுக்க வேண்டாம் என்று அரசாங்கத்திற்கும் இத்தகைய தடுப்பூசிகளை மக்கள் ஏற்ற வேண்டாம் என்றும் கூறினார்.மார்ச் 17 ஆம் திகதி நிபுனர்களின் அறிக்கையை வைத்தியர் கமல் குணரத்னவிடம் வழங்கப்பட்டது.

இதையும் தாண்டியே சன்ன ஜயசுமன சீனாவிலிருந்து தடுப்பூசிகளை கோரியுள்ளார்.Beijing Institute of Medicine க்குரிய தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனமும் உள் நாட்டு நிபுணர் குழுவும் அனுமதி வழங்கவில்லை என்று தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.