ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட எம்பியாக இருந்த ரஞ்சன் ராமநாயக்கவுடைய வெற்றிடத்திற்கு அஜித் மான்னப்பெரும பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டார்.

இதனை தொடர்ந்து பாராளுமன்ற நிலையியல் கட்டளை 05 க்கு அமைவாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க முன்னிலையில் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் ஆவணத்தில் கைச்சாத்திட்டார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ரத்தானதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக அஜித் மானப்பெருமவை நியமிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்திருந்தது. இதுதொடர்பாக விசேட வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டிருந்தது. (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.