ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் நளின் பண்டார , குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுடன் சம்பந்தப்பட்ட சில விடயங்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது அங்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கருத்துத் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு மிகப் பெரிய ஆணையை வழங்கியது. ஆனால் அரசாங்கம் அந்த ஆணையை இன்னும் தவறாகப் பயன்படுத்துகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா மீதான தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கா நியமித்த ஆணைக குழு மற்றும் இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின்  செயல்பாட்டில் ஏற்பட்ட மாற்றம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன் போது விளக்கினார்.

தனது உறுப்பினர்களைப் பாதுகாக்கவும் பலப்படுத்தவும் எப்போதும் செயல்படுவேன் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார். (Siyane News)கருத்துரையிடுக

Blogger இயக்குவது.