ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக நௌபர் மௌலவியையும் ஹஜ்ஜுல் அக்பரையும் சரத் வீரசேகர நோற்று அடையாளப்படுத்தினார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாக்குதல் நடந்து சில நாட்களின் பின்னர் கைது செய்யப்பட்ட நௌபர் மௌலவியை தான் பிரதான சூத்திரதாரியாக அடையாளப்படுத்தியுள்ளார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். 

நேற்றைய தினம் (07) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆனால் கடந்த தேர்தல்களின் போது பிரதான மூல சூத்திரதாரிகளைக் கண்டு பிடிப்போம் என்று பிரசாரம் செய்தவர் நல்லாட்சி அரசாங்கம் நியமித்த ஆணைக்குழுவின் அறிக்கையை மையப்படுத்தி நௌபர் மௌலவியுடன் இந்த விசாரணைகளையும், தாக்குதலையும் முடிவிற்கு கொண்டு வர முயற்சிக்கின்றனர்.

இன்று அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு அதிருப்திகள் மேலெழுந்துள்ள இந்நிலையில் அவற்றிலிருந்து மீளுவதற்கு திடீரென இருவரின் பெயர்களை அடையாளப்படுத்தி  வெளிப்படுத்தியுள்ளனர்.குறிப்பாக கார்தினல் உட்பட கிறிஸ்தவ சமூகத்தையும் அரசாங்கத்தின் சமகால பிரச்சினைகளையும் மூடி மறைக்கவே இவ்வாறு மேற்கொண்டுள்ளனர்.

பின்னணியில் செயற்பட்ட, பலப்படுத்திய பிரதான நபர்கள் குறித்து கண்டறியப்படவில்லை.கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட நௌபர் மௌலவி ஆணைக்குழுவில் ஆஜராகவில்லை.சஹ்ரானின் மனைவியின் வாக்கு மூலம் வெளியாகவில்லை. ரவி செனவிரத்ன எழுத்து மூலம் வழங்கிய அவர் சந்தேகித்த நபர் தொடர்பான விடயங்கள் வெளியாகவில்லை. பூரண தகவல்கள் வெளிப்படுத்தப்படாத பூரணமற்ற இந்த ஆணைக்குழு அறிக்கையை வைத்து சரத் வீரசேகர இறுதி முடிவுகளுக்கு வந்துள்ளார்.

சாரா தொடர்பான பல சந்தேகங்கள் உள்ளன.சாரா உயிருடன் இருப்பதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக அரசாங்கம் இது வரை என்ன முடிவுகளை எடுத்துள்ளது? வழக்கு தாக்கல் செய்துள்ளதா? சாரா உயிருடன் இல்லை என்று அரசாங்கம் கூறுமானால், சாரா மன்னார் ஊடாக இந்தியா செல்ல உதவியதன் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை ஏன் விடுதலை செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார். (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.