கொவிட்-19 உயர் ஆபத்து வலயங்களாக, கொழும்பு, கம்பஹா, குருநாகல் மாவட்டங்கள் மாறியுள்ளதாக, இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் றோஹண தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், மேற்கு மற்றும் வட மேற்கு மாகாணங்களிலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் சில பகுதிகளில் விரைவாக கொவிட்-19 அதிகரிப்பு ஏற்பட்டதாகவும் றோஹண கூறியுள்ளார்.

தவிர, சில வகையான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமெனத் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும், ஆனால் தற்போது இது நடைபெறுவதைக் காணவில்லை என்று றோஹண தெரிவித்துள்ளார்.

(தமிழ் மிரர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.