கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக அத்தனகல்ல ஓயா பெருக்கெடுத்துள்ளது.

இதனால் கஹட்டோவிட்ட, பஸ்யாலை, உடுகொட பிரதேசங்களின் தாழ் நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் திஹாரியை அண்மித்த உடுகொட பிரதேசத்தில் சுமார் 40 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், சில வீடுகளில் மூன்று அடிக்கும் அதிகமாக வெள்ள நீர் உட்புகுந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பெருநாள் தினமான இன்று (14) வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதனால் மேற்படி பிரதேசங்களை சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி தேவைப்படுவதாகவும் முடிந்த உதவிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கஹட்டோவிட்ட தொடர்பான செய்திhttp://www.siyanenews.com/2021/05/blog-post_14.html

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.