ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை

கொவிட் பரவலை அரசாங்கத்தால் உரிய நோரத்தில் கட்டைப்படுத்த முடியாமல் போனதால் நாட்டு மக்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

பயணத்தடை காரணமாக நாளாந்த வருமானம் பெறும் மக்கள் பாரிய சிக்கல்களுக்கு முகம் கொடுத்த வன்னமுள்ளனர்.நாளாந்த கூலி தொழில் செய்பவர்கள்,நாளாந்தம் சுய தொழில் புரிபவர்கள்,தனியார் துறையில் தொழில் புரிபவர்களில் தற்காலிகமாக தொழில் இழந்தவர்கள் போன்றவர்கள் இதில் அடங்கும்.

ஆகார பானங்களுக்குள்ள வாய்ப்புகளை இழந்த தவிக்கின்றனர்.அதே போல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்ப அங்கத்தவர்களும் தமது தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளனர்.பயணத்தடை காரணமாக தமது உறவினர்கள் நண்பர்களின் உதவிகளையும் கூட பெறமுடியாத சூழ்நிலையில் உள்ளனர்.

கொவிட் முதலாம் மற்றும் இரண்டாம் அலைகளின் போது அரசாங்கம் உரிய பாடங்களை கற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாக புலப்படுகிறது.இந்த மக்களுக்காக எந்த வித திட்டங்களையும் நடைமுறைப்படுத்தாததால் இது தெளிவாக வெளிக் காட்டி நிற்கிறது.

தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்குவதற்கும் மக்களை வாழ வைப்பதற்கும் அரசாங்கத்தால் முடியாதுள்ளது.இதன் பால் பெறுப்புச் சாட்டப்பட்ட செயலணியின் தலைவர் கூட இன்று நாட்டில் இல்லை.அசாதாரண காலநிலையால் கூட இன்று மக்கள் பல்வேறு இன்னல்களை முகம் கொடுத்த வன்னமுள்ளனர்.இந்த விடயம் குறித்த பொறுப்புள்ள அமைச்சர் யார் என்பதில் கூட சிக்கல்கள் எழுந்துள்ளன.

புலமைத்துவ அரசாங்கம் என்று தங்களைக் கூறிக் கொண்டாலும் புலமைத்துவமற்ற அரசாங்கமாக என்பது தெளிவாகிறது.சுகாதார துறையினரை ஒன்று கூட்டுவதாக கூறிய அரசாங்கம் மூட நம்பிக்கையாளர்களை ஒன்று கூட்டியது.

அரசாங்கம் துரிதமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆளும் தரப்பு அரசாங்கத்தின் அமைச்சர்கள் தம்மிடம் போதியளவு நிதி இருப்பதாக தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள் அத்தியாவசிய தேவையுடைய மக்களுக்கு ஆகார, பானங்கள் அடங்கிய பொதியை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.பயணத்தடை தொடரும் வரை இந்தத் தேவையுடையவர்களுக்கு தொடர்ச்சியாக வழங்குமாறு அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

மனிதநேயமிக்க நோக்கை வசனத்தில் கூறாமல் நடைமுறையில் செயற்ப்படுத்த வேண்டும்.மக்களின் பெயரில் இதைச் செயற்ப்படுத்துமாறு அரசாங்கத்திடம் திடமாக வேண்டிக் கொள்கிறோம். (Siyane News)கருத்துரையிடுக

Blogger இயக்குவது.