எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

´எரிபொருள் விலை தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எடுப்பார்கள். விலை அதிகரிக்கப் படாவிட்டால் சிறந்தது என்றுதான் நாம் எதிர்ப்பார்கிறோம். எனினும் நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு அதிகாரிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். விரைவில் சிறந்த தீர்மானம் ஒன்று எடுக்கப்படும்´. என்றார்.

இதேவேளை, எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் இன்று கூடும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சரவை ஊடக பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை கூட்டம் இன்று பிற்பகல் 05 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Adaderana 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.