2021/06/09நூறு நகரங்களை அழகுபடுத்துவதற்கு முன், இருநூற்று இருபது இலட்சம் மக்களின் வாழ்க்கையை அழகுபடுத்துவோம்

ஒரே நேரத்தில் 100 நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது.  இதற்காக ரூபா.2000 மில்லியனை மேலதிகமாக ஒதுக்கீடு செய்யப்படுவதாக என்றும் கூறப்படுகிறது. இந்த நாடு அழகாக இருக்க வேண்டும் என்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று முதலில் நான் சொல்ல விரும்புகிறேன்.இந்த அசாதாரண நிலைமைகளுக்கு மத்தியில் நகரங்களை அழகுபடுத்துவதற்கு முன், இருநூற்று இருபது இலட்சம் மக்களின் வாழ்க்கையை அழகுபடுத்துவதிலயே கவனம் செலுத்தப்பட வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்த நாட்டு மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

1. நாட்டில் முழு கல்விச் செயற்ப்பாடும் இந்த நேரத்தில் தொடர்ந்தும் குழப்பத்தில் உள்ளது.இணைய வழி கல்வி இன்னும் அன்னியமானதாக காணப்படுவதோடு, பொறுப்பற்ற அமைச்சரின் தூரநோக்கற்ற செயல்களால் இது மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது.

2. பல ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கை ஏற்கனவே மோசமான நெருக்கடியில் உள்ளதோடு அறுவடைகளை உரிய முறையில் விற்க முடியாத சிக்கல்களை சந்தித்துள்ளதால் மேலும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர் .

3. இலட்சக்கணக்கான வேலைகள் இழக்கப்பட்டுள்ளதோடு, சில நிறுவனங்களும் மூடப்படும் நிலையை எதிர் நோக்கி வருகிறது. அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் வாழ்க்கை முற்றிலும் பரிதாபமாகிவிட்டது.கூலித் தொழிலாளிகள்,வாடகை வாகன ஊழியர்கள்,சாதாரன தொழிலாளிகள் உள்ளிட்ட ஒட்டு மொத்த தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கை துரதிஷ்டவசமான நிலையை எட்டியுள்ளது.

4. சுகாதாரத் துறை வீராங்கனைகளின் சாதாரன கோரிக்கைகளைக்கூடக் கொடுக்காததன் மூலம் அரசாங்கம் அவர்களின் வாழ்க்கையை பரிதாபப்படுத்தியுள்ளது. தடுப்பூசியை முழுமையாக அரசியல்மயமாக்குவதன் மூலம் கொரோனா பேரழிவு ஒரு அரசியல் கால்பந்தாக மாறியுள்ளது.

5. நாட்டின் தேசிய வளங்களை விற்று, நாட்டிற்கு ஆபத்து விளைவிப்பதன் மூலமும்,கடல், சுற்றுச் சூழல் உள்ளிட்ட அனைத்தையும் அழிப்பதன் மூலமும் அரசாங்கம் முழு நாட்டையும் இழிவுபடுத்தியுள்ளது.

6. இவ்வாறு, இருநூற்று இருபது இலட்சம் மக்களின் வாழ்க்கையும், அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கையும் முற்றிலும் பரிதாபகரமான ஒரு சூழ்நிலையில் இருக்கத்தக்க, நகரங்களை அழகுபடுத்துவதுவதாக செயற்ப்படுவது, முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவை குறித்து அரசாங்கத்திற்கு எந்தவிதமான உணர்திறனோ அல்லது விழிப்புணர்வோ இல்லை என்பதை தெளிவாக்குகிறது.

இந் நேரத்தில் அனைத்து மக்களின் வாழ்க்கையையும் அழகுபடுத்தவும், அதன் பின்னர் நகரங்களை அழகுபடுத்துவதில் கவனம் செலுத்துமாறும் நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.

சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.