யக்கலை, வெரல்லவத்தை பிரதேசத்தில் நடுத்தர வர்க்கத்தினருக்கு 154 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் கீழ் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அரச பொறியியல் கூட்டுத்தாபனம் என்பன ஒன்றிணைந்து இத்திட்டத்தை செயற்படுத்தவுள்ளன. 

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இக்காணியில் முதலாவது கட்டமாக 05 ஏக்கர் காணியில் 12 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் 154 வீடுகள் கட்டப்படவுள்ளன. ஒரு வீட்டின் அளவு 559 சதுர அடியாகும். ஒரு வீட்டின் பெறுமதி 9.5 மில்லியன் ரூபாயாகும்.

ஆரம்ப வைபவத்தில் கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, கம்பஹா மாநகர மேயர் எரங்க சேனாநாயக்க, கம்பஹா பிரதேச சபை தவிசாளர் ரஞ்சித் குணவர்தன உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் அமைச்சின் செயலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேசிறிவர்தன, மேலதிக செயலாளரும் (வீடமைப்பு) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிக (Acting) தலைவருமான W.M.ஆனந்த, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரத்னசிறி களுபஹன உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். (Siyane News)





கருத்துரையிடுக

Blogger இயக்குவது.