இன்றைய ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்த கருத்துக்கள்.

தற்போது நாட்டில் பல நெருக்கடிகள் நிலவுகின்றன, கொரோனா என்ற போர்வையில் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக வரும்போது அவர்களை அடக்க அரசாங்கம் முயல்கிறது.ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாக நாமும் அதைக் கண்டிக்கிறோம். நேற்று பல போராட்டங்கள் நடந்தன, ஆனால் அவர்களுக்கு எதுவும் நடக்கவில்லை. இன்று ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு நாடு ஒரு சட்டம் என்றனர்,இன்று அறுபது சட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றனர். அடக்குமுறையை பிரயோகித்தால் பிரச்சினை சரியானது என்று அரசாங்கம் கருதுகிறது. இந்த செயல்முறை காரணமாக நம் நாடு வெளிநாட்டினரால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இப்போது கூட வெளிநாடுகளில் பேசப்படுகிறது ஜி.எஸ்.பி சலுகை பற்றி. அரசாங்கம் தானாகவே இத்தகைய பிரச்சிணைகளை இழுத்துக் கொள்கிறது.

மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல், ஆசிரியர்களின் பிரச்சிணைகளுக்கு செவிசாய்க்காமல் அடக்குமுறை இந்த அரசாங்கம் பிரயோகிக்கிறது.இன்று இது ஒரு பிரச்சினையாக நாட்டில் உருவெடுத்துள்ளது. ஆசிரியர்களின் பிரச்சிணைகளைத் தீர்க்காமல் அடக்குமுறையை மேற்கொள்வது சிறந்தல்ல. ஆன்லைன் கல்வி ஓரளவு வெற்றிகரமாக இருந்ததாலும் குறைந்தளவினாலான கல்வியும் இன்று மாணவ சமூகத்திற்கு இல்லாமல் போகிறது. நேற்று முதல் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர், ஆனால் அதை கல்விசாரா ஊழியர்களுக்கு வழங்க முடிவு செய்யப்படவில்லை. அவர்களுக்கும் தடுப்பூசி போடுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். உலகின் பிற நாடுகள் 12 வயதிலிருந்தே தடுப்பூசி போடுகின்றன, ஆனால் நம் நாட்டில் 30 வயதுக்கு மேலும் பூரணப்படுத்த முடியாதவர்களக இருக்கிறோம். 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு தற்போது ஆய்வுகளை நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

நம் நாட்டில் எரிசக்தி உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையங்கள் பல உள்ளன. மின் உற்பத்தி நிலையங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிறுவனத்தை ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கும் இன்னும் பல மின் உற்பத்தி நிலையங்களை வழங்க முற்படுகிறது.டெண்டர் நடைமுறை இல்லாமல் வழங்க இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  ஒரு அமெரிக்க குடிமகன் நாட்டின் ஜனாதிபதியாகவும், ஒரு அமெரிக்க குடிமகன் நிதியமைச்சராகவும் மாறும்போது இது நடக்கும் என்று நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொன்னோம், ஆனால் மக்களுக்கு புரியவில்லை, கொழும்பைச் சுற்றியுள்ள மதிப்புமிக்க ரியல் எஸ்டேட் நிலங்களை விற்கும் செயல்முறை தற்போது அரங்கேரி வருகிறது. செலன்திவா நிறுவனம் மூலம் நாட்டின் மதிப்பு மிக்க இடங்கள் விற்க்கப்படுகிறது.

யால தேசிய பூங்காவிற்கு அருகில் தற்போது ஒரு பெரிய வீதி அமைக்கப்பட்டு வருவதாகவும், விமானங்களை இறக்குவதற்காக இப்பகுதியில் ஒரு ஹெலிபேட் கட்டப்பட்டு வருவதாகவும் அறியப்படுகிறது. இந்த ஏலத்தை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நான் கூறுகிறேன். யால தேசிய பூங்கா நம் நாட்டிற்கு ஒரு சிறந்த வளமாகும். இதில் யானைகள் உட்பட ஏராளமான விலங்குகள் வசித்து வருகின்றன.இது மிகவும் மதிப்புமிக்க சுற்றுலாப் பகுதி என்பதால் தீங்கு விளைவிக்காதீர்கள்.

தற்போது நாட்டு மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் வாழ்கின்றனர். அரசாங்கம் எந்த நிவாரணமும் இவர்களுக்கு வழங்கவில்லை. இதன் விளைவாக பல பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. பசில் வந்ததும் எரிபொருள் விலையை குறைப்பதாக கூறினார். இப்போது இந்த அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கத்தை விட பல அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரித்துள்ளது. மக்கள் வாழ முடியாமல் போய்விட்டனர். ராஜபக்ஷர்களின் கரங்களில் 70 சதவீத அரச நிறுவனங்கள் பொறுப்பில் உள்ளன.எனவே நிறுவனங்களையும் அதிகாரங்களையும் வைத்துக் கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கவும்.

(Siyane News)

විපක්ෂ නායක කාර්යාලයේ පැවැත්වෙන මාධ්‍ය හමුව සජීවීව

විපක්ෂ නායක කාර්යාලයේ පැවැත්වෙන මාධ්‍ය හමුව සජීවීව

Posted by SJB - Api on Wednesday, July 14, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.