முன்னாள் நகரபிதா கே.ஏ. பாயிஸ் அவர்களின் மறைவினையடுத்து வெற்றிடமான புத்தளம் நகர சபைக்கான தலைவர் தெரிவு இன்று (01) இடம்பெற்றது.

இதன்போது எந்த வித போட்டியும் இன்றி  உப நகர பிதா புஷ்பகுமார அவர்கள் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நகர சபை உறுப்பினர் கெளரவ எம்.எஸ்.எம். ரபீக் அவர்களை பிரேரிக்க, அனைத்து உறுப்பினர்களின் அமோக ஆதரவுடன் நகர சபை தலைவராக ரபீக் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்..

புத்தளம் நகர சபை மீண்டும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் நகர சபை தலைவராக தெரிவான ரபீக், மறைந்த முன்னாள் நகர சபை தலைவரான பாயிஸின் குடும்பத்தவர்களை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

(Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.