படம் - லங்காதீப


கொவிட் பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் நாடு முடக்கப்படாத போதும், நேற்றைய தினம் (15) நாட்டின் 09 நகரங்களிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டன.

குறித்த நகரங்களில் உள்ள வர்த்தக சங்கத்தினரின் தீர்மானத்திற்கமைய இவ்வாறு வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன.

கம்பஹா, வெயாங்கொடை, அம்பலாந்தோட்ட, அம்பலாங்கொடை, மரதகஹமுல, தங்கொடுவ, சேருநுவர, பலாபத்வல (மாத்தளை மாவட்டம்) மற்றும் உல்பத ஆகிய நகரங்களிலுள்ள வர்த்தக நிலையங்களே இவ்வாறு மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இது தவிர, பண்டாரவளை நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் நாளை (17) முதல் 22 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இன்று முதல் யக்கலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு அங்குள்ள வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.