ஐ. ஏ. காதிர் கான்

   கம்பஹா மாவட்டத்தில் 7003 பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுவரை இவர்களில் எவரேனும்  வைத்தியசாலைகளில்  அனுமதிக்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.  கம்பஹா மாவட்ட கொரோனாத் தடுப்புக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

   கொரோனாத் தொற்றாளர்கள் அவர்களது வீடுகளில் அல்லது அவர்கள் எங்கு தங்கியிருக்கிறார்கள் என்பது பற்றித் தெரியவில்லை என்று,  கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

   இதேவேளை, குறித்த தொற்றாளர்களை மருத்துவமனையில் சேர்ப்பதற்கும், அவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்படுகின்றதா என்பதைக் கண்டறிவதற்கான  நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

   எனினும்,  பாதிக்கப்பட்டவர்களை இனங்கண்டு, அவர்களை விரைவில்  சிகிச்சை மையங்களுக்கு அழைத்துச் செல்ல, இராணுவத்துடன் இணைந்து  கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (Siyane News)


 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.