மக்கள் கொரோனாவிலிருந்து மட்டுமன்றி அரசாங்கத்திடமிருந்தும்  தங்களைப் பாதுகாத்துக் கொள்ள  வேண்டியுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது பொருட்களின் விலைகள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் உயர்ந்துள்ளது.  கொரோனாவின் கட்டுப்பாட்டையும், பொருட்களின் விலையையும் கட்டுப்படுத்தும் திறனை அரசாங்கம் இழந்துவிட்டதோடு, நிலைமை கழுத்தை நெரிக்கும் ஒரு கொள்ளை வடிவமாக உருவாகியுள்ளது.  அரிசி, கோதுமை மாவு,சீனி, பால், காபி, சோயாபீன்ஸ் மற்றும் இறைச்சி வகைகள் ஆகியவற்றின் மொத்த விலைகள் 16 முதல் 32 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளன, அதே நேரத்தில் தானியங்கள் மற்றும் பழங்களின் துணை பொருட்கள் மூலம் உற்ப்பத்தி செய்யப்படும் ஏனைய பொருட்களின் விலைகள் இன்னும் உயர்ந்துள்ளன.  அத்தகைய பொருட்களில் பால் மா, வெண்ணெய், சோயா, எண்ணெய் மற்றும் பல்வேறு உணவு பொருட்கள் இதில் அடங்கும்.

⏺அரசாங்கம் ஒரு தீவிர வர்த்தக மாஃபியா செயல்பட அனுமதிக்கும் போது அரசாங்கம் அதற்கு துனைபோகிறது.  பொருட்களின் விலை கட்டுப்பாடு தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்புகள் மற்றும் சுற்றறிக்கைகள் அனைத்தும் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன, மேலும் அவை அனைத்திற்கும் மேலாக மாஃபியா உயர்ந்துள்ளது.  அதை எதிர்கொள்ளும் திறன் அரசுக்கு இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

⏺அரிசி மாஃபியாவை எதிர்கொள்வதாக அரசாங்கம் பெருமை பேசினாலும், அது ஒரு முழுமையான தோல்வியான நிலைப்பாட்டயே காட்டுகிறது.இன்று, அரிசி விலைகள் அபாயகரமான அளவில் உயர்ந்து வருகின்றன.

⏺ கஜ மித்துரு நண்பர்களுக்கு அதிக வரிச்சலுகை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. சீனி மோசடியால் ஏற்படும் இழப்பு சிறியதல்ல.  தேங்காய் எண்ணெய் மோசடி மற்றும் நச்சு தேங்காய் எண்ணெய் இறக்குமதியால் ஏற்படும் அழிவு மிகப்பெரியது.  இன்று தேங்காய் எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது.

⏺சந்தையில் ஊட்டச்சத்துக்களுக்கு பெரும் பற்றாக்குறை உள்ளது மற்றும் குறிப்பாக இளம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் இதன் காரணமாக கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்கின்றனர்.  வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் மிகவும் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு இது தாங்க முடியாதது நிலையாகும், ஆனால் அரசாங்கம் இது குறித்து எத்தகைய அவதானத்தையும் செலுத்துவதாக இல்லை.

⏺ அரசாங்கத்தின் வாழ்க்கைச் செலவுக் குழு ஒரு முட்டாள் தமனாகிவிட்டது, அதிலிருந்து எடுக்கப்பட்ட எந்த ஜனரஞ்சக முடிவும் நாட்டில் செயலில் இருப்பதைக் காண முடியாதுள்ளது.  எவ்வாறாயினும், அரசாங்கம் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை நோக்குமிடத்து தற்போதைய நிலைமையை உணராமல் தேவையற்ற பெரிய அளவிலான திட்டங்களில் கவனம் செலுத்துகிறது. நகரத்தை அழகுபடுத்துதல், நெடுஞ்சாலை கட்டுமானம் போன்ற திட்டங்கள் தேவை ஆனால் அது எந்த வகையிலும் இன்றியமையாதது,என்றாலும் தற்போதைக்கு முன்னுரிமையற்ற ஒன்றாகும் என்பதோடு, மக்களை உயிருடன் வைத்திருப்பதில் முதன்மை கவனம் செலுத்தப்பட வேண்டும்.  எனினும், பங்களாதேஷிலிருந்து கூட கடன் வாங்கும் நிலையில் உள்ள அரசாங்கம், மக்களின் வாழ்வாதாரத்தை விட கமிஷன் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கே முன்னுரிமை அளித்துள்ளது.

⏺இந்த கொடூரமான உலக பேரழிவை எதிர்கொண்டு உலகின் அனைத்து அரசாங்கங்களும் தங்கள் மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்கு முன்னுரிமை கொடுக்கும் சூழ்நிலையில், இந்த நாட்டின் அரசாங்கம் முற்றிலும் மாறுபட்ட ஒன்றைச் செய்து கொண்டிருக்கிறது.  இலங்கை ஏற்கனவே ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது, மக்கள் இப்போது கொரோனாவிலிருந்து தங்களைக் காப்பாற்றுவதை விட அரசாங்கத்திலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்று சிந்திக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.  அப்படித்தான் அரசின் கொள்கை மனிதாபிமானமற்றதாகிவிட்டதுமக்கள் எதிர்ப்பாளராக மாறிவிட்டானர்.

இந்த நேரத்தில் அரசாங்கம் செய்ய வேண்டியது குடிமக்களின் உயிருடன் விளையாடும் விளையாட்டை ஒதுக்கி வைத்துவிட்டு, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக மக்கள் சார்பு கொள்கைக்கு மாற வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.