கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் இன்று காலை பத்து மணி முதல் இரண்டு மணிவரை கொரோனா தடுப்பூசி இரண்டாம் மாத்திரை வழங்கப்பட்டது.

அத்தனகல்ல பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சுகாதார காரியாலய அதிகாரிகள்  MOH மற்றும் பிரதேச சுகாதார அதிகாரிகள்,கிராம சேவகர்கள் ஏற்பாட்டிலும் உள்ளூர் பள்ளிவாசல் நிர்வாகிகள் சமூக சேவகர்கள்,பாடசாலை அதிபர் , ஒத்துழைப்பிலும் நடைபெற்ற மேற்படி இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நிகழ்வில் ஏராளமான ஊர் மக்களும் அயலூர் மக்களும் கலந்து கொண்டனர்.

இன்று காலையில் இதற்காக கிராம சேவகர் டபிள்யு எம் கமல் வணிகசேன அவர்கள் நம்பர் துண்டு வழங்குவதற்கும் ஏற்பாடு செய்திருந்தார்.இதிலே முதலாம் தடுப்பூசி பெறுபவர்களுக்கும் இரண்டாம் கட்ட தடுப்பூசி பெறுபவர்களுக்குமென வெவ்வேறாக துண்டுகள் விநியோகம் செய்யப்பட்டன.

காலை 7 மணிமுதலே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து நம்பர் துண்டுகளை பெற்ற போதிலும் பிரதேச சுகாதார அதிகாரிகள் பத்து மணி பிந்தியே வருகை தந்தனர்.ஆனாலும் வழங்கிய நம்பர் துண்டுகளின் அடிப்படையில் தடுப்பூசி வழங்கும் நிகழ்வு நடைபெறாமல் இருந்தமை பலரினதும் விமர்சனத்துக்குட்பட்டது.

வருகை தந்த சுகாதார அதிகாரிகளும் வைத்தியர்களும் கடந்த முறை இந்த நிலையத்தில் வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் அளவை விட சிறிய அளவில் கூடுதலாகவே கொண்டு வந்திருந்தனர்.

இதனால் தடுப்பூசி வழங்கும் நிகழ்வு ஆரம்பமான போது நீண்ட வரிசையில் நம்பர் துண்டு பெற்ற  மக்கள் தடுப்பூசி பெறுவதற்காக வரிசையில் காத்திருந்தனர.இப்படியாக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து தடுப்பூசி வழங்கும் இடத்தை நெருங்கும் போது சுகாதார அதிகாரிகளும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியும் கஹட்டோவிட்ட அல் பத்றியாவில் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கே வழங்கப்படும் எனவும் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வந்திருப்பவர்களுக்கோ வேறு இடங்களில் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கோ தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்தார்.

இதனால் குழப்பமடைந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகியதோடு  குறித்த சுகாதார அதிகாரிகளையும் ஏற்பாட்டாளர்களையும் குறைப்பட்டு விமர்சனம் செய்து கோபமடைந்தவர்களாக வெளியேறியதை காணக்கூடிய தாக இருந்தது.

இரவில் பள்ளிவாசல்களிலும் ,ஒலி பெருக்கி போட்டு ஊர் முழுவதும் 30 வயதிற்கு மேற்பட்ட எல்லோருக்கும் தடுப்பூசி வழங்குவதாக அறிவித்து ஊரையே ஒன்று கூட்டி நம்பர் துண்டு களை காலையிலே வழங்கியிருந்த போதிலும் உரிய இடம் வரும் வரைக்கும் வரிசையில் வரவிட்டு முதலாவது அல்லது வேறு இடங்களில் முதலாவது தடுப்பூசியை பெற்றவர்களுக்கு சுகாதார தரப்பினர் தடுப்பூசி வழங்க முடியாது எனக்கூறியமை ஒழுங்கீனமற்ற ஏற்பாடு எனவும் மக்கள் குறை கூறியதையும் ஏற்பாட்டாளர்களை விமர்சனம் செய்தமையும் கவனிக்க கூடியதாக இருந்தது.

இருந்த போதிலும் இன்றைய தினத்தில் மொத்தமாக 756 பேருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கியதாக பிரதேச சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்றைய தினத்தில் அல் பத்றியா மகா வித்தியாலயத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசியை பெற முடியாமல் போனவர்களுக்கு எதிர் வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை கூர்வமுல்லை பாடசாலையில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று காலையில் சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட தடுப்பூசி மாத்திரைகளே கிடைக்கப்பெற்றமையும் முதலாவது தடுப்பூசியை அதிகமானோர் பெற்றுக்கொள்ளாததன் காரணமாக அதிகமான மாத்திரைகள் திருப்பி அனுப்பப்பட்டமையும் அரசாங்கத்தினால் வரையறுக்கப்பட்ட தடுப்பூசி மாத்திரைகளே கிடைக்கப்பெற்றமையும் இந்த நிலைமைக்கு காரணமாகும் என பிரதேச சுகாதார அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டறிந்த போது தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் இறுதி கட்டத்திலும் நிறைய பேர் காத்திருக்கையில் சொற்ப அளவான மாத்திரைகள் இருந்த போதிலும் அவற்றை வழங்காது சுகாதார வைத்திய அதிகாரி திருப்பி எடுத்து சென்றமை தொடர்பில் காத்திருந்தோர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியமையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

இருந்த போதிலும் மேலதிகமாக கொண்டு வந்த மாத்திரைகளிலிருந்து  ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌முதலாம் தடுப்பூசியை வேறு இடங்களில் பெற்றுக்கொண்ட சிலருக்கு இறுதியில் வழங்கப்பட்டதாகவும் பிந்திக்கிடைத்த தகவல் மூலம் அறியக் கிடைத்தது.

இன்றைய காலை முதல் மதியம் வரை தடுப்பூசி வழங்கும் நிகழ்வில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் , சுகாதார வைத்திய அதிகாரிகளினால் தடுப்பூசி வழங்கும் நிகழ்வையும் பள்ளிவாசல் நிர்வாகிகளும் சமூக சேவகர்களும் இதற்காக பல்வேறு வகைகளில் உதவி புரிவதையும் படங்களில் காணலாம்.

-எம்.ஆர்.லுதுபுள்ளாஹ்-








கருத்துரையிடுக

Blogger இயக்குவது.