மாகாண எல்லைகளை கடக்க முயற்சித்த வாகனங்கள் பல திருப்பி அனுப்பப்பட்டன!

Rihmy Hakeem
By -
0



இலங்கையின் அனைத்து மாகாண எல்லைகளை உள்ளடக்கிய வகையில் பயணக்கட்டுப்பாடு நேற்று (13) முன்தினம் நள்ளிரவு 12 அமுல்படுத்தப்பட்டதனை அடுத்து தடைகளை மீறி செயல்படுவோரின் வாகனங்கள் பொலிசாரினால் திருப்பி அனுப்பப்படுகின்றன.

வடமேல் மாகாணத்தையும் மத்திய மாகாணத்தையும் பிரிக்கின்ற எல்லையில் கண்டி குருநாகல் பிரதான வீதியில் அமைந்துள்ள மெட்டிபொக்க மற்றும் கலகெதர இடங்களில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடிகளில் மாகாண பயணடைத் தடைகளை மீறி பயணம் செய்ய முயற்சிப்போரின் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.

குருநாகல் இருந்து கண்டிக்குச் செல்லும் வீதியில் கலகெதர என்ற இடத்தில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் இவ்வாறு செல்ல முயன்ற வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.

சப்ரகமுவ மாகாணத்தில் இருந்து மேல் மாகாணத்துக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் அவிசாவளை சீதாவக்க வாகன சோதனைச் சாவடியில் சோதனை செய்யப்படுகின்றன. பரிசோதனை செய்தபின் அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டும் மேல் மாகாணத்துக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படுகின்றன. ஏனைய வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. 

அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)