நாடு பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால் அரச செலவினங்களை இயலுமான அளவு குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.

கொவிட் தாக்கத்தினால் பொருளாதார ரீதியில் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அரச வருவாய் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளன.

இந்நிலைமைகளுக்கு மத்தியில் மானியங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் ஆரம்பிக்கப்பட்டாத அபிவிருத்தி செயற்திட்டங்கள், கொள்வனவு செய்தல், கட்டிடங்களை புனரமைத்தல், ஆகியவற்றை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அமைச்சரவையில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஊழியர்களை சேவையில் இணைத்துக் கொள்வற்கான நியமனங்களை வழங்குவதையும், பதவிகளுக்கான நியமனங்கள் வழங்குவதும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நலன்புரி நடவடிக்கைகளுக்காக அடையாளம் காணப்பட்டுள்ள பயனாளர் பட்டியலை மீள்பரிசீலனை செய்யவும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் நிவாரண நிதியை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

வீரகேசரி 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.