நாட்டில் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ திருமண நிகழ்வுகளை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று (15) நள்ளிரவு முதல் மக்கள் ஒன்றுகூடும் எந்தவொரு சந்தர்ப்பத்திற்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்தார். 

இது தவிர உணவகங்களில் ஒரு தடவையில் 50% இற்கும் குறைவானவர்களுக்கே செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பொது இடங்களில் சுற்றித்திரிவதை இயன்றவரை தவிர்க்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 (Siyane News)
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.