எனது அமைச்சின் கீழ் வருகின்ற இராஜாங்க அமைச்சர் ஒருவர் இவ்வாறு செயற்பட்டுள்ளமை என்னையும் அசௌகரியத்துக்கு உட்படுத்தியுள்ளது என நீதி அமைச்சர் அலி சப்ரி கவலை வெளியிட்டுள்ளார்.

அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களுக்காக சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோருகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்விரு சிறைச்சாலைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்தையடுத்து ஜனாதிபதியை தொடர்புகொண்டு லொகான் ரத்வத்தவை சிறைச்சாலைகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சுப் பதவி விலக்குமாறு நாமே கோரினோம்.

இதற்கமையவே அமைச்சு பதவியில் இருந்து அவரை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் இப்படியான சம்பவங்கள் இடம்பெற்றிருக்ககூடாது எனவும் அவற்றை அனுமதிக்கவும் முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Source

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.