ஊடகங்கள் மற்றும் ஊடக சுதந்திரத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தலை வன்மையாகக் கண்டிக்கிறோம் - சஜித் பிரேமதாச 

ஊடகச் சுதந்திரத்துக்கு பாரிய அச்சுறுத்தலை விடுத்து லங்காதீப, திவயின ஆசிரியர்களுக்கு. அதன் சில ஊடகவியலாளர்களுக்கு மட்டுமன்றி இன்னும் சில ஊடகங்களின் ஊடகவியலாளர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருமாறு கட்டளையிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்ட விடயங்கள்:

சனநாயகத்தை மதிக்கும் சமூகத்தில் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் தொடர்பில் அரசியலமைப்பின் 14 (1) ஆம் பிரிவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அவ்வாறான நாட்டில் ஊடகங்களுக்கு இவ்வாறான அச்சுறுத்தல்களை யாரும் விடுக்க முடியாது.

◾ மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் சாசனம் மற்றும் ஐரோப்பிய மனித உரிமைகள் தொடர்பான இணக்கப்பேச்சு ஆகியவற்றில் கருத்து மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமை அனைவரின் உரிமை என்பது தெளிவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகும்.

◾ நாட்டில் ஊழல் மற்றும் மோசடிகளை அம்பலப்படுத்துவது ஊடகங்களின் பொறுப்பாகும், மேலும் அந்தப் பொறுப்பைச் செய்யும் ஊடகவியலாளர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு விசாரணைக்காக அழைப்பதற்கும், அவர்களை இலக்கு வைப்பதற்கும்,, மிரட்டுவதற்கும் அல்லது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கும் எவருக்கும் உரிமை இல்லை என்பதை வலியுறுத்துகின்றோம்.

◾ தகவல் அறியும் சட்டம் நடைமுறையில் இருக்கும் போது இதுபோன்ற அழைப்புகளை ஒருபோதும் செய்ய முடியாது, மேலும் இவ்வாறான பாதுகாப்பு  இல்லாவிட்டாலும் கூட, ஊடகவியலாளர்களுக்கு இதுபோன்ற அச்சுறுத்தல் அழைப்புகளை விடுக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உரிமை இல்லை.

◾ அவ்வாறு அழைப்பது ஊடகவியலாளர்களை அவமதித்தல் போன்றதாகும் மற்றும் அவர்களின் ஊடகச் சுதந்திரத்துக்கு விடுக்கப்படுகின்ற கடுமையான முறையற்ற அச்சுறுத்தலாகும் என்றே நாங்கள் கருதுகின்றோம்.

▪ இந்த நாட்டில் ஊழல் மற்றும் மோசடிகளை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்துவதற்கான காரணம் மோசடிகளை அம்பலப்படுத்தும் செயற்பாடுகளாக இருக்கலாம் என்பதுடன் அதனை நாங்கள் ஊடக சுதந்திரத்திற்கு அமைவாக கடுமையாக எதிர்க்கின்றோம்.

◾ கடந்த காலத்தில் நடந்த சில தவறுகளை எதிர்காலத்துக்கும் உரிமையாக்கிக் கொள்ளல், அல்லது அதனை நியாயப்படுத்தல் மேம்பட்ட சனநாயகத்தை மதிக்கும் ஒரு சமுதாயத்தின் நாகரீக செயற்பாடு அல்ல, அதன் குறைபாடுகள் மற்றும் தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொண்டு சரியான பாதையை தெரிவு செய்தல் வேண்டும்.

◾ ஊடக சுதந்திரத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தடுப்பது, அச்சுறுத்துவது மற்றும் தணிக்கை செய்வது என்பது நாம் பின்பற்றும் அரசியல் அல்ல, ஊடகங்களுக்கு சுய தணிக்கை மட்டுமே வேண்டும் என்பதே எங்கள் மாறாத கொள்கை.

அந்தக் கொள்கை நிலையானது மற்றும் இது எந்தக் காரணத்தைக் கொண்டும் மாறாது. இந்தச் சவாலுக்கும் அச்சுறுத்தலுக்கும் எதிராக அனைத்து ஊடகவியலாளர்களுடனும் நாங்கள் கைகோர்த்துக் கொள்ளுவோம் என்பதுடன் அவர்களுக்கு சட்டத்தரணிகளின் உதவிகள் தேவைப்படின் அதனை வழங்குவதற்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குழு முன்நிற்கும் என்பதையும் வலியுறுத்துகின்றோம்.

கடந்த கால தவறுகளை சரி செய்யாவிட்டால் எதிர்காலம் மிகவும் துன்பகரமானதாக இருக்கும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம், மேலும் சனநாயகத்தின் முதன்மையான தூணான ஊடகங்களுக்கு ஏற்பட்டுள்ள இவ்வாறான வெறுப்புமிக்க அச்சுறுத்தலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

 

சஜித் பிரேமதாச 

எதிர்க்கட்சித் தலைவர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.