2020ஆம் ஆண்டில் சுமார் 03 மாதங்களாக நாடு முழுமையாக மூடப்பட்டிருந்ததால், வரலாற்றில் முதன் முறையாக, நாட்டின் பொருளாதாரம் எதிர்மறை நிலைமைக்குத் தள்ளப்பட்டது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். 

இன்று (03) வீடியோ தொழில்நுட்பம் மூலம் நடைபெற்ற கொவிட் தடுப்பு செயலணியின் விஷேட கூட்டத்தில் வைத்தே இவ்வாறு தெரிவித்தார்.

சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு எனும் யதார்த்தத்தைப் புரிந்து, பொருளாதாரத்தைப் பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்ல, அனைத்துத் தரப்பினரும் பொறுப்புணர்வுடன் தீர்மானங்களை எடுக்க வேண்டுமென்றும், ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.

(Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.