A/L பரீட்சைக்கு முன்னர் பாடத்திட்டத்தை பூர்த்தி செய்ய முடியாத நிலை இருப்பதாக மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ள விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம் - கல்வி அமைச்சர்

Rihmy Hakeem
By -
0

 




உயர் தர பரீட்சைக்கு முன்னர் பாடத்திட்டத்தை பூர்த்தி முடியாத நிலை இருப்பதாக மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ள விடயம் தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியிருப்பதாக கல்வி அமைச்சர் தினைஷ் குணவர்தன இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரணில்விக்கிரமசிங்க கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ,உயர் தர பரீட்சைக்கு முன்னர் பாடத்திட்டத்தை பூர்த்தி முடியாமை நிலைமை தொடர்பில் தீர்வை காண்பதற்கு பரீட்சை திணைக்கள ஆணையாளருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருப்பதாக  கூறினார்.

உயர் தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கை ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அமைச்சர் தெரிவிததார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)