சுகாதார அமைச்சுக்கு நன்கொடையாகக் கிடைத்த, சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட 11 மில்லியன் ரூபா பெறுமதியான High Flow Oxygen Therapy Ventilator இயந்திரங்கள் மூன்று கொழும்பு தேசிய வைத்தியசாலை, கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை மற்றும் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை என்பவற்றுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (04) சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. 

இவை Expo Lanka Holding PLC நிறுவனம் Fight Cancer குழுவுடன் இணைந்து நன்கொடை செய்யப்பட்டவையாகும்.  இந்த வென்டிலேடர் இயந்திரங்கள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் கையளிக்கப்பட்டதுடன் ஒரு வென்டிலேட்டரின் விலை 3,690,000 ரூபா ஆகும்.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்ஜீவ முனசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, வைத்தியாலைகளின் பணிப்பாளர்களும் கலந்து கொண்டதுடன் Expo Lanka Holdings நிறுவனத்தின் தலைவர்  அப்துல் லதீப் சஜீத் இல்யாஸ், Fight Cancer Trust நிறுவனத்தின் இணை தலைவர்களான ருக்மன் வீரரத்ன, மிஹ்ராஜ் சாலி உள்ளிட்டவர்களும்   கலந்து கொண்டிருந்தனர்.

(Siyane News)






கருத்துரையிடுக

Blogger இயக்குவது.